ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோயில்||சனீஸ்வரன் திருக்கோயில்|| திருநள்ளாறு
இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி.
மூலவர் தர்ப்பாரண்யேசுவரர்.
இவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார். அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார். அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிசேகம், பிரதோசம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடத்தப்பெறுகின்ற விழாக்களாகும்.
Phone Office : ( 04368 )236530 Fax : ( 04368 )236504 Email : sds.kkl@nic.in