திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில்|| kumbakonam

Apr 02 2025

திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில்|| kumbakonam



 



திருநாகேஸ்வரம் (ஆங்கிலம்:Thirunageswaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் மற்றும் உப்பிலியப்பன் கோயில் உள்ளது.இது வணிக நகரமான கும்பகோணத்தின் புறநகர் பகுதி ஆகும்



 



முன்பொரு காலத்தில் செண்பகமரம் நிறைந்த இடமாக இருந்ததால் செண்பக வனம் என்று பெயர் பெற்றது. இங்கு இறைவன் லிங்க வடிவில் செண்பக மரத்தின் கீழ் எழுந்து அருளினார். அதனால் இறைவனது பெயர் செண்பகாரண்யேஸ்வரர் எனப்பட்டது. இத்தல இறைவியின் பெயர் குன்றுமாமுலைக்குமரி (கிரிகுஜாம்பாள்). ஒரு சமயம் பிருங்கி முனிவர் இறைவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்ததால் கோபம் கொண்ட இறைவி இத்தலத்தில் இலட்சுமி, சரசுவதி, விநாயகர் மற்றும் பாலசுப்பிரமணியர், பால் சாஸ்தா ,சங்கநிதி, பதுமநிதியுடன் தபசு மேற்கொண்டு இறைவனிடத்தில் வலப்பக்கம் பெற்றாள். அதனால் இறைவன் மங்கை பங்கர் ( அர்த்தநாரீஸ்வரர்) பெயர் பெற்றார். சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால் இராகு பகவானுக்கு சாபம் ஏற்பட்டது. தன் சாபம் நீங்க மகாசிவராத்திரி புண்ணிய தினத்தில் இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கி மங்கள இராகுவாக தன் இரு மனைவியுடன் பூரணத்திருமேனியுடன் இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் எழுந்தருளியுள்ளார். அதனால் இத்தல இறைவனை நாகநாதர் என்றும் இவ்வூர் திருநாகேஸ்வரம் என்று பெயர் பெற்றது. நான்முகன், சூரியன், சந்திரன்,இந்திரன் மற்றும் தவமுனிவர்களாகிய கௌதமர்,பராசரர் மற்றும் அரசர்கள் நலன், பகிரதன்,சம்புமாலி ஆகியோர் இறைவனை வணங்கி அவர்கள் துயரத்திலிருந்து விடுபட்டனர்



கல்வெட்டு



கல்வெட்டு தலைப்பு / குறிப்பு எண் - கல்வெட்டு



இருப்பிடம் - கோயில் உள்ளே



கல்வெட்டு விவரம் - நாகநாதசுவாமி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை உள்ளேயும் வெளியேயும் நாம் காணலாம், இங்கு 24 கல்வெட்டுகள் உள்ளன. தொல்லியல் துறையின் பணியாளர்கள் 1897, 1911, 1932 ஆம் ஆண்டுகளில் வந்து இந்த கல்வெட்டுகளை நகலெடுத்து இது குறித்து குறிப்பு செய்தனர். 1897 இல் 81 முதல் 84 வரையிலும், 1911 இல் 211 முதல் 222 வரையிலும், 1932 இல் 65 முதல் 72 வரையிலும் இந்தக் கல்வெட்டுகளைப் பதிவு செய்து வகைப்படுத்தினர்.

இக்கோயிலில் காணப்படும் இந்த கல்வெட்டுகள் அனைத்தும் பிற்கால சோழ மன்னர்களுக்கு சொந்தமானவை. தமிழ்நாட்டின் இடைக்கால வரலாற்றைப் புரிந்துகொள்ள இந்தக் கல்வெட்டுகள் நமக்குப் பயனுள்ளதாக இருந்தன. பல சோழ மன்னர்களின் வெற்றிகளும் சில கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. அவர்களின் நில அளவீடுகள், சமூக அமைப்பு பற்றிய தகவல்கள் இந்த கல்வெட்டுகளில் சிலவற்றில் காணப்படுகின்றன. மீண்டும், பல கல்வெட்டுகள் இந்த கோவிலுக்கு அதிகாரிகள் மற்றும் ராணிகள் மூலம் தங்கம், நிலம் மற்றும் பிறவற்றைப் பற்றி நமக்குக் கூறுகின்றன



 




  • சிவன் சன்னதி தெரு,

  •  

  • - 612204.

  • தொலைபேசி எண் : 0435-2463354

  • மின்னஞ்சல் : sriraaghutemple[at]gmail[dot]com