மகரம் ராசிக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2025

Apr 11 2025

 (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்



 



கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம் | 21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி



 



 



 



பலன்கள்: எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யும் மகர ராசி அன்பர்களே! இந்த ஆண்டு வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் படிப்படியாக குறைந்துவிடும். உற்றார் உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பிராணிகளாலும் வருமானம் கிடைக்கும். வெளியில் கொடுத்த கடன்கள் தடையில்லாமல் குறித்த காலத்தில் திரும்பக் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். நெடுநாளாக மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபடுவர். புதிதாக நண்பர்களானவர்களாலும் உதவிகள் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிரிகளிடமிருந்து விலகி நின்று செயல்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த காரியங்கள் இப்பொழுது நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். கவுரவம், அந்தஸ்து உயருவதைக் காண்பீர்கள். கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமாக இருப்பதால் அனைவரிடமும் நடுநிலைமையுடன் பழகுங்கள். உங்களின் ஆலோசனைகள் அனைவராலும் மதிக்கப்படும்.



கைநழுவிப்போன பதவிகள் உங்கள் கையைத் தேடிவரும். சமுதாயத்தில் உடன்பிறந்தோரால் பாராட்டப்படுவர். உற்றார் உறவினர்கள் மீது உங்களது பாசம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். கவலைகள் மறையும். சுகவீனங்களும் மறையும். தீய எண்ணங்கள் மனதில் புகாமல் இருக்கும். நண்பர்களையும் ஆதரிக்கும் மனப்பான்மை உண்டாகும். அன்னையுடன் நல்ல உறவு தொடரும். சரியான நேரத்தில் உணவெடுத்துக் கொள்வீர்கள். மற்றபடி அனைத்துச் செயல்களிலும் தெளிவான போக்கு தென்படும் காலகட்டமாக இது அமைகிறது.



உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் மறைந்து சுமுகமான சூழ்நிலை தென்படும். உழைப்புக்குத் தகுந்த ஊதியமும் கிடைக்கும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். சக ஊழியர்களிடம் இணக்கமான உறவு மேம்படும். அவர்கள் உங்கள் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வர். சிலருக்கு வீடுகட்ட கடன்களும் கிடைக்கும்.



வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். கடும்போட்டிகளையும் சந்திக்க நேரிடும். எனவே புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கூட்டாளிகளும் சாதகமாக நடந்து கொள்வர்.



 



அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளால் நன்மை உண்டாகும். எதிர்கட்சியினரிடமும் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். எதையும் முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வர். செல்வாக்கு உயரும். மற்றபடி கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.



கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்து கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். மற்றபடி சக கலைஞர்கள் உதவக்கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும். புதிய கலைப்பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.



பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பணவரவும் சீராகவே இருந்துவரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் ஆன்மீகச் சுற்றுலாவுக்கும் சென்று வருவீர்கள். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.



 



மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளிலும் பங்கேற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள்.



 



உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும்.



 



திருவோணம்: இந்த ஆண்டு தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.



 



அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.



 



பரிகாரம்: சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும். சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு பொன்னான காலம் கனிந்து வரும். கிழக்கு, தெற்கு ஆகிய திசைகள் நன்மை தரும். சந்திரன் - செவ்வாய் - குரு ஹோரைகள் அதிர்ஷ்டமாக இருக்கும்.