மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்

May 09 2025

மார்க்கசகாயேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கருகிலுள்ள மூவலூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களில் காணப்படும் தேவார வைப்புத் தலம் ஆகும்.

கோயில் விவரம்

திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம்

 பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்.

ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன ஷேத்திரம் என வழங்கப்பட்டது. இறைவன் ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்

ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால், இறைவனுக்கு ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலானது. இதே போல் மூவரும் வழிபட்ட ஊர் இது என்பதால், ‘மூவரூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது ‘மூவலூர்’ என்றாகிஇருக்கிறது.