ராமாவதாரத்தின் ராமச்சந்திரசுவாமிக்கும் இராவணனுக்கும் நடைபெற்ற போரில் ஒரு கட்டத்தில் ராமனின் தம்பி லட்சுமணன மயங்கிவிடுகிறான்.
அந்த பரம்பொருளான ராமன் நினைத்திருந்தால் லட்சுமணனை ஒரு நொடியில் எழுப்பி விடலாம்.
அப்படி செய்ய அவருக்கு மனமில்லை அருகில் இருந்த விபீஷணர் ராமனுக்கு ஆறுதல் தந்ததோடு சஞ்சீவி பர்வதத்தில் இருந்து மூலிகையை எடுத்து வந்து லட்சுமணனை முகத்தில் பட வைத்தால் மூச்சையிலிருந்து எழுந்துவிடுவார் என்று கூறினார். இச்செயலை செய்ய சர்வமும் தானே என்று இருக்கும் மகாபராக்கிரமமான ஆஞ்சநேயர் ஒருவரால் தான் இயலும் என்பதை உணர்ந்த இராமன் அனுமனிடம் வந்து உதவி கேட்கிறார்
உடனே சஞ்சீவி பர்வதத்தை அடைந்து மூலிகையை தேடுகிறான் ஆஞ்சநேயர் அவனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை அந்த சஞ்சீவி பர்வதத்தையே தனது கைகளில் தூக்கி நிறுத்தி பறந்து வந்து விடுகிறான். ஸ்ரீ ராமன் முகத்தில் அனுமனை கண்டதும் சந்தோஷம் அடைகிறார்
விபீஷணனிடம் அடையாளம் காட்ட சஞ்சீவி மூலிகை லட்சுமணனின் முகத்தில் வைக்க அவரும் முச்சையில் இருந்து விடப்பட்டு எழுகிறான் தாங்க முடியாத சந்தோஷத்தில் செய்யக் கூடிய செயலை செய்து முடித்த ஆஞ்சநேய ஸ்வாமியை தழுவி கொள்கிறார் ராமச்சந்திரமூர்த்தி அப்போது அனுமானின் கைகளை அவர் கவனிக்க மலையை சுமந்து வந்ததால் உள்ளங்கையில் புண்கள் ஏற்பட்டு ரணமாகி இருந்தது. அதைக் கண்ட ராமர் தாமரை மலரை கொண்டு அனுமானின் கையை மெல்ல வருடி விடுகிறார் ஆஞ்சநேயனுக்கு பிரபு தனக்கு சேவை செய்ததில் சந்தோஷம் பிடிப்படவில்லை துள்ளி குதிக்கிறார் நர்த்தனம் ஆடுகிறார் ஆம் இப்படி நர்த்தன கோலத்தில் அனுமான் காட்சி தரும் புண்ணிய ஸ்தலம் தான் திருமலைவையாவூர்
இங்கு வீர நர்த்தன ஆஞ்சநேயர் என்ற திருநாமத்தோடு. சேவை சாதிக்கிறார். கிழக்கு பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன்வைத்தும் வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார், தாமரை தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. இத்தகைய கோலத்தை இவரை காண்பது மிகவும் அரிது. உடல்நிலை சரியில்லாதவர்கள்
இத்திருக்கோவிலில் வந்து இந்த ஆஞ்சநேயனை நாம் தரிசித்தோமே ஆனால் நமது உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் போக்குகிறார் என்பது திருக்கோவில் நம்பிக்கை இன்னும் பகவான் பலவிதமான பக்தர்களுடைய வியாதிகளையும் மன வியாதிகளையும் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள் அதற்கு இத்திருக்கோவிலில் வரும் அனைத்து விதமான பக்தர்களுமே சாட்சி.