சுவாமிமலை முருகன் கோவில்|| kumbakonam

May 26 2025

சுவாமிமலை முருகன் கோவில்.



 தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு முருகனின் 4ஆம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது.



 சுவாமிமலை முருகன் கோவில்.



அமைவிடம்



சுவாமிமலை பேரூராட்சி, கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது.



பேரூராட்சியின் அமைப்பு



2.12 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]



மக்கள் தொகை பரம்பல்



2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,878 வீடுகளும், 7,289 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]



அறுபடைவீடு



ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.



முதன்மைக் கட்டுரை: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்



இங்கே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு ஆகும். தாளமும், சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4 ஆம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.[9]



திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்:



பாடல் 226



இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே... (வெற்பு = மலை)



சப்தஸ்தானம்



 



சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.[10]